ஜோதிட ரீதியான மகத்துவமும் கிரக தோஷ நிவர்த்தியும்

ஜோதிடத்தில் கடகம் ராசி என்பது தாயை குறிக்கும் ராசியாகும். ஒரு குழந்தை தாயின் பாசத்திற்கு தான் கட்டுப்படும், அதனால் தான் செவ்வாய் (சேய்) அங்கு நீசம் அடைகிறார்.

இந்த வருடம் கோட்சாரத்தில் குரு பகவான் கடகத்தில் உச்ச பலத்தில் உள்ளது மிகவும் விசேஷமானது.

குருவுக்கு குருவான ஶ்ரீ முருகப்பெருமானை மனமுருகி வணங்கி வரும்போது கிரக ரீதியான சகல தோஷங்களையும் நீக்கும் சக்தி வாய்ந்த நாளாக இந்த ஆடிக் கிருத்திகை திகழ்கிறது.

ஆடிக் கிருத்திகை விரதமும் வழிபாட்டு முறைகளும்

ஆடிக் கிருத்திகை நாளில் அதிகாலையில் நீராடி, விரதமிருந்து, முருகன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வது மிகவும் புண்ணியமாகும்.

இந்நாளில் 'ஓம் சரவணபவ' மந்திரம், கந்த சஷ்டி கவசம், சுப்பிரமணிய புஜங்கம், திருப்புகழ் போன்றவற்றைப் பாராயணம் செய்வது சிறந்த மற்றும் உடனடி பலன்களை அளிக்கும்.

ஆடிக் கிருத்திகை வழிபாட்டினால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

முருகப்பெருமானின் அருள் பெற்ற ஆடிக் கிருத்திகை விரதம் மேற்கொள்வதால் வாழ்வில் பின்வரும் பல நன்மைகள் உண்டாகும்:

  • திருமணத் தடைகள் நீங்கி விரைவாக திருமணம் கைகூடும்.
  • குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
  • கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.
  • எதிரிகள் மற்றும் தடைகள் விலகி வெற்றி கிடைக்கும்.
  • கடன் தொல்லைகள் படிப்படியாகக் குறையும்.
  • மனஅமைதி, தைரியம் மற்றும் ஆன்மிக முன்னேற்றம் உண்டாகும்.
  • குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் செல்வ வளம் பெருகும்.